பழைய நிலைக்கு திரும்பிய தங்கத்தின் விலை!!

சனி, 14 மார்ச் 2020 (10:56 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472க்கு விற்பனை ஆகிறது.
 
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.33,848க்கு விற்பனை ஆனாது. அதன் பின்னர் விலை ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது.    
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நிலைமை மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குசந்தை இறங்குமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் வர்த்தகமும் சரிந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472க்கு விற்பனை ஆகிறது.
 
அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.79 குறைந்து ரூ.3,934க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை மீண்டும் பழை நிலைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்