நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், "கரூர் நிகழ்ச்சியில் அரசு உரிய கவனம் செலுத்தாததால், விஜய்க்கும், அவரை காண வந்த தொண்டர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று குற்றம் சாட்டினார். சமீபத்திய மெரினா சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, "கூட்டணி நடக்கலாம், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாங்கள் கூட்டாக அரசாங்கத்தை எதிர்ப்போம். அது கூட்டணியா, கூட்டாகவா என்பதை வருங்காலம் முடிவு செய்யும்" என்று கூறி, த.வெ.க.வுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்த்தினார்.