பிஎஸ்என்எல் நிறுவனம் 'தீபாவளி போனான்ஸா' என்ற பெயரில், வெறும் ரூ. 1 செலவில் ஒரு புதிய விளம்பர ப்ரீபெய்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்த 'புதிய ப்ரீபெய்டு விளம்பர திட்டத்தின்' கீழ், புதிய வாடிக்கையாளர்கள் ரூ. 1 மட்டும் செலவிட்டு 30 நாட்களுக்கு இந்த சலுகையைப் பெறலாம். இதில், அவர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 குறுஞ்செய்திகள் ஆகியவை கிடைக்கும்.
இந்த சலுகை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். மேலும், மொபைல் எண் போர்ட்டபிளிட்டி மூலம் பிஎஸ்என்எல் இணைப்புக்கு மாறும் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.