பாஜக- பாமக கூட்டணி உறுதி

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (19:26 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், பாஜக தேசிய தலைமை சமீபத்தில் 2 வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
 
இதிலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை.
கூட்டணியில் இழுபறி நீடிப்பதால் அதில் தமிழ்நாட்டு வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை என தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக, இன்று டெல்லியில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
 
இதனைத்தொடர்ந்து, இன்று  பாஜக-பாமக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கிறது பாமக என்று தெரிவித்தார்.
 
விரைவில் பாமக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகும் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்