அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வருகிற 20 ஆம் தேதி கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை இன்று அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேமுதிகவுடனும் தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.