பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின் நெருங்கிய நண்பர்.. தேர்தலில் போட்டியா?

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (19:15 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் அவர்களின் நெருங்கிய நண்பர் சற்றுமுன் பாஜகவில் இணைந்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் கமல்நாத் நெருங்கிய நண்பர் என்று அறியப்படும் சையத் ஜாபர் என்பவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார் 
 
முன்னதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து கமல்நாத்  விலக உள்ளதாகவும் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு அது வதந்தி என்பதை கமல்நாத் உறுதி செய்தார் 
 
இந்த நிலையில் திடீரென அவருக்கு மிக நெருக்கமான நண்பர் பாஜகவில் இணைந்திருப்பதை அடுத்து கமல்நாத் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள சையத் ஜாபர் என்பவருக்கு வரும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்