உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

Siva

செவ்வாய், 1 ஜூலை 2025 (18:53 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தின் மலை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ருத்ரபிரயாகில் உள்ள அலக்நந்தா நதி 20 மீட்டருக்கும் மேல் அபாயகரமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, பில்னி பாலத்தின் கீழ் இருந்த படித்துறைகள், நடைபாதைகள் மற்றும் 15 அடி உயர சிவபெருமான் சிலை கூட முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளன. 
 
அலக்நந்தா நதியும், அதன் கிளை நதிகளான மண்டாகினி உள்ளிட்டவையும் பெரும் வேகத்துடன் பாய்வதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இமாச்சலப் பிரதேசத்திலும் இடைவிடாத பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 10 மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக மாண்டி மாவட்டத்தில் இரவு முழுவதும் இடைவிடாத மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
கனமழை காரணமாக மாண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பாண்டோவுக்கு அருகிலுள்ள பதீகரி மின் திட்டம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. மழை தொடர்வதால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதாக் செய்திகள் வெளியாகியுள்ளது,
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்