தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் தமிழகத்திற்கு டயரில் விழுந்து கும்பிடும் அரசியல்வாதிகள்தான் கிடைப்பார்கள் என பாஜக அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை ”தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு 2 ஆயிரம் என வழங்குவதுதான் தமிழக அரசியல். இந்த தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் தலைக்கு மேல் லைட் வைத்து செல்பவர்களும், டயருக்கு கீழ் விழுந்து கும்பிடு போடுபவர்களும்தான் ஆட்சிக்கு வருவார்கள்” என பேசியுள்ளார். இந்த வார்த்தைகள் மறைமுகமாக அதிமுக பிரமுகர்களை தாக்கும்படி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.