அதிமுக, திமுக போட்டியால் நல்லது நடந்த அதிசயம்!

ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (19:34 IST)
அதிமுக, திமுக போட்டியால் நல்லது நடந்த அதிசயம்!
திமுக மற்றும் அதிமுக எந்த ஒரு விஷயத்திலும் போட்டி போடுவார்கள் என்பதும் அதனால் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் நடக்காது என்பதும் தான் கடந்த கால வரலாறு. ஆனால் முதல் முறையாக திமுக அதிமுகவினரின் போட்டியால் ஒரு நல்லது நடந்துள்ளது
 
சென்னை அருகே உள்ள சித்தேரி என்ற ஏரியை அதிமுக மற்றும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சுத்தம் செய்தனர். ஆகாயத்தாமரைகள் மற்றும் குப்பை கழிவுகளால் அந்த ஏரி மாசடைந்த இருந்த நிலையில் இந்த ஏரியை சுத்தம் செய்யப் போவதாக திமுகவினர் அறிவித்தனர் 
 
இதனையடுத்து உடனடியாக அதிமுகவினரும் அந்த பகுதிக்கு வந்து சுத்தம் செய்யத் தொடங்கினார். இரு தரப்பினரும் மாறி மாறி ஆகாய தாமரை இலையும் குப்பைகளையும் அகற்றியதால் ஒரு சில வாரங்களில் சுத்தம் செய்ய வேண்டிய பணி 48 மணி நேரத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
திமுக, அதிமுகவினர் இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு மக்கள் நலனை செய்தால் இதைவிட பெரிய நல்ல நல்ல விஷயம் எதுவும் இருக்காது என்று சமூக வலைதள பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்