2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி அமைத்த நிலையில் 2016ல் தேமுதிக தனியாக மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. பின்னர் தற்போது மீண்டும் மக்களவை தேர்தலால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தேமுதிக தரப்பில் பேசப்படும் விஷயங்கள் தொடர்ந்து அதிமுகவுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக அமைந்து வருகின்றது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது கட்சி தொண்டர்களை தேர்தல் பணிக்கு தயார் செய்து வருகிறது தேமுதிக. இந்நிலையில் இன்று விருதுநகரில் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய நடிகரும், தேமுதிக இலக்கிய அணி செயலாளருமான ராஜேந்திரநாத் பேசுகையில் 2011ல் சட்டமன்றத்தில் நான் எம்.எல்.ஏவாக இருந்திருந்தால் விஜயகாந்தை கை நீட்டி பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அப்போதே அடித்திருப்பேன் என பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சியில் உள்ள அமைச்சர் குறித்து தேமுதிக பிரபலம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.