இது ஒன்றும் 1967 அல்ல, சூதானமா இருங்க: திமுகவுக்கு காயத்ரி ரகுராம் எச்சரிக்கை!

ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (19:31 IST)
1967 ஆம் ஆண்டு பொய்யான அவதூறுகளை காமராஜர் மீது பரப்பி வெற்றி பெற்றது போல் தற்போது வெற்றி பெற முடியாது என்றும் சூதானமா இருங்கள் என்றும் திமுகவை நடிகையும் நடன இயக்குநரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காமராஜர் தனது சொந்த தொகுதியான விருதுநகரில் திமுக வேட்பாளர் ஒருவரால் வீழ்த்தப்பட்டார். அதனை அடுத்து தான் தமிழகத்தில் திராவிட கட்சி ஆட்சியை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது
 
பெருந்தலைவர் காமராஜர் மீது பொய்யான அவதூறுகளை பரப்பி அவரை தோற்கடித்தார்கள் திருட்டு திமுக. அதேபோல் இன்று மோடி அவர்களின் மீது பொய்யான அவதூறுகளை சுமத்துகிறார்கள். திருட்டு திமுகவே இது ஒன்றும்1967அல்ல. மக்களின் முன்பு உங்கள் முகமூடிகளை கிழித்து எறிவோம். பார்த்து சூதானமா இருங்க. என்று பதிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்