ஜனவரி 13ஆம் தேதி சர்வதேச பலூன் திருவிழா.. தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (19:43 IST)
baloon
தமிழ்நாட்டில் ஜனவரி 13-ஆம் தேதி சர்வதேச பலூன் திருவிழா நடைபெறும் என தமிழக சுற்றுலாதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
சர்வதேச பலூன் திருவிழா தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி நகரில் தொடங்க உள்ளதாகவும் ஜனவரி 13ம் தேதி இந்த பலூன் திருவிழா தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 இந்த விழாவில் 8 நாடுகளை சேர்ந்த 10 வகையான பலூன்கள் பறக்க விடப்பட உள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுவரை தமிழ்நாட்டில் ஏழு முறை பலூன் திருவிழா நடைபெற்ற நிலையில் தற்போது 8-வது முறையாக இந்த பலூன் திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்