பொள்ளாச்சி பாஜக நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடிகள் மீது டீசல் ஊற்றிய கோடாரியால் வெட்டியும் உடைப்பால் பரபரப்பு.
பொள்ளாச்சி நகர்புர பகுதியில் உள்ள குமரன் நகர் பகுதியில் சுமார் 5000.த்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த பொன்ராஜ் அமைப்புசார மாவட்ட செயலளர் சிவா முன்னால் நகர மற்றும் பா.ஜ.க பொறுப்பாளர் சரவணக்குமார் இவர்கள் இந்துமுண்னனி வார்டு பெறுப்பாளர்களாக உள்ளனர்.
இன்று அதிகாலை மர்ம நபர்கள் பொன்ராஜ் கார், சிவாவின் கார், சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் இவரது இரண்டு ஆட்டோக்கள் மற்றும் கார் மீது கோடாரியால் கண்ணாடியை உடைத்தும் டீசல் ஊற்றியும் மர்ம நபர்கள் எரிக்க முயற்ச்சி செய்து உள்ளனர்.
ஆனால் வீட்டின் அருகில் இறந்தவர்கள் சத்தம் கேட்டு வெளியில் வந்த பார்த்த பொழுது மர்ம நபர்கள் தப்பி ஓடினர் இதை அடுத்து தகவல் அறித்து வந்த பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்தும் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அப்ப பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் NIA அமைப்பு சில தீவிரவாத அமைப்பு நிர்வாகிகளை கைது செய்துள்ளனர் இதைப் பொறுத்துக் கொள்ளாத சிலர் பிஜேபி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி ஆட்டோகளை சேதப்படுத்தி டீசல் நிரப்பிய கவர்களை வீசி சென்றுள்ளனர்.
காரை தீ வைக்க முயன்றுள்ளனர் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வருவதற்குள் தப்பி சென்று விட்டனர் எனவும் பாஜக நிர்வாகிகளை பயமுறுத்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சமூக விரோத கும்பலை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று சம்பவ இடத்தில் குவிந்த பிஜேபியினர் தெரிவித்துள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என பாஜக மற்றும் இந்து முன்னணியினர் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளனர்.