ஆயுத பூஜை, விஜயதசமி; பூக்கள் விலை கிடுகிடு உயர்வு! – விலை நிலவரம் என்ன?

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (09:55 IST)
நாளை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றே பூக்கள் விலை கிடுகிடு விலை உயர்வை சந்தித்துள்ளது.



தமிழ்நாட்டில் நாளை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. சரியாக திங்கள், செவ்வாய் விடுமுறை வந்து விட்டதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

பொதுவாக விசேஷ நாட்களில் பூக்களின் விலை உயர்வது வாடிக்கையாக உள்ளது. தற்போது முகூர்த்த நாள் மற்றும் ஆயுதபூஜையும் சேர்ந்து வருவதால் பூக்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பூ சந்தைகளில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, மல்லிப்பூ கிலோ ரூ.1000க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.1200க்கும், செவ்வந்தி கிலோ ரூ.200க்கும், சின்ன ரோஜா கிலோ ரூ.250க்கும் விற்பனையாகி வருகிறது. பூக்கள் விலை அதிகரித்துள்ள அதேசமயம் விற்பனையும் படுஜோராக நடப்பதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்