மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு: தமிழக அரசு அறிவிப்பு

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (08:58 IST)
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் என்றும், வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
ஆய்வின் அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டால், பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது.
 
 சொந்த,வீடு கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருகும் சிலர் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருவதாக புகார் கூறப்பட்டதை அடுத்து இந்த திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தகுதி இல்லாதவர்கள்  இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்றால் அவர்களுக்கான பணம் நிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில்  இந்த திட்டத்தில் உண்மையாகவே பயன்பெறும் பயனாளிகள் இதுவரை பயன் பெறாமல் இருந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்