அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி: கல்வித்துறை அறிவிப்பு..!

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (09:04 IST)
ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய தமிழக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.

அந்த வகையில்  வரும் நவம்பர் மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வு பயிற்சிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்கும் என்றும் சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
முதல் கட்டமாக நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவ மாணவிகள் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளதாகவும் அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் இருந்து சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் அரசு பள்ளிகளில் இலவச நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயிற்சியை அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்