பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும் - வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (09:47 IST)
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கன மழை காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும். தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கில் 170 கீ.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
இது வடக்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, இதுமேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளுக்கு இடையில், குறிப்பாக காரைக்காலுக்கும்ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையில் புதுச்சேரிக்கு வடக்கே இன்று மாலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் வட மாட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு இன்று அதிதீவிர கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்