கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 36,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெரம்பூர், வியாசர்பாடி, சூளைமேடு, புரசைவாக்கம், மேற்கு மாம்பலம், தி,நகர், கே.கே.நகர் மற்றும் வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது என தகவல்.