கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! திமுகவுக்கு எடப்பாடி கண்டனம்.!!

Senthil Velan
வியாழன், 4 ஜூலை 2024 (15:29 IST)
கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்துள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
 
சம்மந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு, அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில் சுட்டிக்காட்டிய பிறகும், திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்று எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா ஸ்டாலின் அவர்களே? உங்கள் அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ALSO READ: சீன அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..! எல்லை பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை..!!
 
கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்