துணை முதல்வர் பதவி.. விஜய்யிடம் ரகசிய பேச்சுவார்த்தையா? ஈபிஎஸ் பக்கா பிளான்..!

Siva

திங்கள், 24 ஜூன் 2024 (15:09 IST)
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி வைத்து தெலுங்கு தேசம் கட்சி வென்றது மட்டுமின்றி பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்து விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் தனியாக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே வெற்றி பெற முடியாது என்பது அவருக்கு நன்றாக தெரியும். 
 
அதனால் அவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்டது. சீமானின் நாம் தமிழர் கட்யை விஜய்யுடன் கூட்டணி வைக்க ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என்றும் விஜய் தரப்பில் கூறப்படுவதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் தான் அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் விஜய் துணை முதலமைச்சர் என்று ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போக போக தான் தெரியும். 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்