டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி ரூபாய்.. அண்ணாமலை குற்றச்சாட்டு..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (07:37 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில் தற்போது ட்ரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி அளவிலான மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.
 
மின்சார துறை அமைச்சருக்கும், மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாமல் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை
 
எனவே அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் உட்பட இதில் தொடர்புடைய மின்சார வாரிய பணியாளர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்