அண்ணாமலை தலைமையில் திருமணம் நடத்திய அதிமுக நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கிய ஈபிஎஸ்,..!
வியாழன், 6 ஜூலை 2023 (13:09 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடத்திய அதிமுக நிர்வாகியை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கி உள்ளார், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட புரட்சி தலைவி பேரவை செயலாளர் முரளி என்பவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு 39 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்த நிலையில் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
மேலும் அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.