மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பெயர் மாற்றி உள்ளது தமிழக அரசு: அண்ணாமலை

Mahendran
திங்கள், 15 ஜூலை 2024 (12:27 IST)
புதிய கல்வி கொள்கையில் காலை உணவு திட்டம் இடம்பெற்றிருந்தது என்றும், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பெயர் மாற்றி உள்ளது தமிழக அரசு என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களை மாநில அரசு கொண்டு வர வேண்டும். காலை உணவு திட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பெயர் மாற்றி உள்ளது தமிழக அரசு. நீட் தேர்வு இருக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை.

நீட் தேர்வில் நடந்த தவறுகள் சரி செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலவரம். மேலும் இதுகுறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து எங்களுக்கு சந்தேகம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் இவர்கள் கூலிப்படையினர் மட்டும்தான், கூலிக்காக மட்டுமே கொலை செய்துள்ளார்கள். இவர்களுக்கு கூலி கொடுத்து கொலை செய்ய சொன்னது யார்? அதை கண்டுபிடிக்க தான் சிபிஐ இடம் இந்த வாழ்க்கை ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுகிறோம்’ என்றும் அண்ணாமலை கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்