விக்கிரவாண்டி உள்பட 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக கூட்டணிக்கு பின்னடைவா?

Mahendran

சனி, 13 ஜூலை 2024 (11:04 IST)
நாடு முழுவதும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி உள்பட 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த நிலையில் இன்று  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி உள்ளது. மொத்தமுள்ள 13 தொகுதியில் ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் முன்னிலையில் மற்ற 12 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி – இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் அமர்வாரா தொகுதியில் மட்டுமே பாஜக முன்னிலையில் உள்ளதாகவும் மற்ற அனைத்து தொகுதிகளிலும் எதிர்கட்சிகள் முன்னிலையில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக சுமார் 15346 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது என்பது தெரிந்ததே.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்