ஓ பன்னீர்செல்வம்தான் அடுத்த முதலமைச்சர் – அமமுக முக்கிய புள்ளி திட்டவட்டம்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (20:00 IST)
இந்திய அளவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் திமுக அபார வெற்றியடைந்தது. அதிமுகவுக்கு 1 இடம்தான் கிடைத்தது. அதேபோல சட்டமன்ற இடைதேர்தலிலும் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “பாஜக எடப்பாடியை தூக்கிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் பன்னீர் செல்வத்தை உட்கார வைக்கும். ஓபிஎஸ் மகன் தேனியில் வெற்றி பெற்றதை ஏற்க முடியவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட வரவேற்று இருப்பேன். எங்களுக்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டது மிகப்பெரிய மைனஸ். எங்களால் மக்களிடம் இதை கொண்டு போய் சேர்க்க கால அவகாசம் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்