எரியும் தீயில் மாடியிலிருந்து குதித்த மாணவர்கள் – சூரத்தில் கொடூரம்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (19:35 IST)
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் மேல் மாடியில் திடீரென தீப்பற்றியது. உயிரை காப்பாற்றி கொள்வதற்காக மாடியிலிருந்து குதித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் ஒன்றின் மாடியில் கோச்சிங் மையம் ஒன்று நடந்து வந்திருக்கிறது. மாலை வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட தீயால் என்ன செய்வதென்று புரியாமல் 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக தற்போது அறிவித்திருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த துயர சம்பவத்திற்கு குஜராத்தின் முதல்வர் விஜய் ரூபானி இரங்கல் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் இந்த துயரமான விபத்து சம்பவத்திற்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்