கண்டக்டரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டியின் வீடியோ வைரலான நிலையில் இன்று மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் என்று கூறினார்.
இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில், மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது ஓசியில் போகமாட்டேன் என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து காசு கொடுத்து டிக்கெட் கேட்டார். ஆனால் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்
இந்த நிலையில் தற்போது பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து , தற்போது, கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன விளக்கம் அளித்துள்ளார். அதில், அரசுப் பேருந்தில் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்றுக் கூறிய மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று பேருந்தில் பயணம் செய்த சில பெண்கள் ஓட்டு நரிடம், விலைவாசி எல்லாம் உயர்ந்துவிட்டது…ஆனால், பேருந்தில் 5 ரூபாய் கொடுத்துப் போவதில் என்னாகப் போகிறது… எங்களுக்கு ஓசி டிக்கெட் தேவையில்லை..இந்தாங்க டிக்கெட் வாங்கிக்கங்க…என்று ஒரு பெண் பேசவே, அதற்கு கண்டக்டர் டிக்கெட்டிற்கு காசு வாங்க மறுத்தார். இன்னொரு பெண், அவர் பேசுவது சரிசான் என்று அப்பெண்ணுக்கு ஆதவராகக் குரல் கொடுத்தார்.