கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (18:21 IST)
திருவாரூர் , நாகை , தஞ்சாவூர், மயிலாடுதுறை, ஆகிய வருவாய் மாவட்டங்களிலும் , கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டத்திலும் வரும்    6 ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


‘’டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமலும்; குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமலும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த விடியா திமுக அரசைக் கண்டித்தும்;

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும்; குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35,000/- ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தியும்,

திருவாரூர் , நாகை , தஞ்சாவூர், மயிலாடுதுறை, ஆகிய வருவாய் மாவட்டங்களிலும் , கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டத்திலும், 6.10.2023 - (வெள்ளிக்கிழமை) அன்று கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், செம்மலை  தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இதில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும்,

விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்