30 மாணவர்கள், 2 ஊழியர்களும் சஸ்பெண்ட்: என்ன நடந்தது மீன்வளப் பல்கலைக்கழகத்தில்?
வியாழன், 29 ஜூன் 2023 (10:22 IST)
நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் திடீரென 30 மாணவர்கள் மற்றும் இரண்டு பல்கலைக்கழக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு இருந்ததாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பணம் கொடுத்து பட்டப்படிப்புகளில் சேர்ந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட நிலையில் மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில் நாகை மின்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 30 மாணவர்கள் மற்றும் 2 பல்கலைக்கழக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.