இதனால், தன் தாயின் மீது அதிகளவு பாசம் வைத்திருந்திருந்தார் அமுர்தீன். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு வயது முதிர்வால் ஜெய்லானி பீவி உயிரிழந்தார்.
இதையடுத்து, தன் தாய்க்கு ஒரு நினைவில்லம் கட்ட முடிவெடுத்து, டெல்லியில் உள்ள தாஜ்மஹால் போன்று தன் தாய்க்கு ரூ. 5 கோடியில் நினைவில்லம் கட்டி, கடந்த ஜூன் 2 ஆம் தேதி இந்த நினைவில்லம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவில்லம், திருவாரூரில், ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.