தக்காளியை அடுத்து வெங்காயம் விலையும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.60 உயர்வால் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (07:12 IST)
கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக சில்லறை கடைகளில் விற்பனை ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்தில் இருக்கும் நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை ஒரே நாளில் ஒரு கிலோ 60 ரூபாய் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.140 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 200 ரூபாய் என அதிகரித்துள்ளது. ஏற்கனவே தக்காளி விலை உயர்வு காரமாக பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தற்போது சின்ன வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்