ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம்.. கடைக்காரரின் அதிரடி சலுகை..!

திங்கள், 10 ஜூலை 2023 (15:46 IST)
தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இன்று சென்னையில் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 130  ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் திருமணத்திற்கு மணமக்களுக்கு பரிசாக தக்காளி கொடுப்பதும் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமிக்கும் செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் மததியபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த செல்போன் கடைக்காரர் ஒருவர் ஒரு ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார்.
 
சந்தையில் தற்போது விலை அதிகரித்துள்ள நிலையில் தக்காளியை பரிசாக அளிப்பதால் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிகிறது என்றும் இது ஒரு நல்ல வியாபாரம் யுக்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்