இதை கொடுத்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! தொண்டு நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

ஞாயிறு, 9 ஜூலை 2023 (10:04 IST)
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாய் அதிகரித்துள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது 
 
தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் துயர் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
தஞ்சையில் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று அந்த தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து வீடுகள் மற்றும் கடைகளில் உள்ளோர் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து தக்காளியை பெற்று செல்கின்றனர்
 
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தஞ்சையை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த முறை கொண்டுவரப்படும் என்றும் அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்