கரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தான்: அமைச்சர் ஆர்.வி.உதயகுமார்

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (15:07 IST)
கரிகாலச் சோழனுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தான்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவரை அனைத்து அமைச்சர்களும் துதிபாடி வந்த நிலையில் தற்போது அவருடைய மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சியை கொடுத்த நிலையில் தற்போது அவருக்கு அனைத்து அமைச்சர்களும் துதிபாட தொடங்கி விட்டனர்
 
இந்த நிலையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்வி உதயகுமார் இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசியபோது ’கரிகால் சோழனுக்குப் பிறகு குடி மராமத்து பணிகளை செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்’ என்று அவர் கூறியுள்ளார் 
 
அப்படி என்றால் கரிகால் சோழனுக்குப் பிறகு ஆட்சி செய்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிச்சாமி சிறந்தவர் என்று ஆர்வி உதயகுமார் கூறுகிறாரா? என அதிமுகவினர்களே கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது 
 
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறுகையில் ’ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சிறந்ததாக இருப்பதாகவும் அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவரவர் முடிவெடுக்க அதிகாரம் கொடுத்துள்ளதாகவும்  கூறி வருகின்றனர் இருப்பினும் கரிகால் சோழனுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தான் சிறந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளது கொஞ்சம் ஓவர் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்