டெல்டாவுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்!!

புதன், 19 பிப்ரவரி 2020 (17:32 IST)
சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 
 
டெல்டா பகுதி மட்டுமின்றி புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். 
 
இந்நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்