இது ஒரு கேவலம்... ஈபிஎஸ் அறிவிப்பை சாடிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

வியாழன், 20 பிப்ரவரி 2020 (15:12 IST)
ஜெ. பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை சாடியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
 
பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தமிழக சட்டசபை கூடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டசபையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
 
அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 
 
பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகள் 21 வயது பூர்த்தியடையும்போது 2 லட்ச ரூபாய் நிதியுதவி பெற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இல்லாமல் வளர்ப்பு பெற்றோரின் கவனிப்பில் வளரும் பெண்களுக்கு 4 ஆயிரம் நிதியுதவியும் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மேலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வியை சரிசமமாக பேணும் மாவட்டங்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இதை சாடியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். 
 
சென்னையில்  நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற மகளிருக்கான சுயபாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற அவர், பிப்ரவரி 24 ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது கேவலமான விஷயம். தற்போதைய சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்கள்  மீதே பழி போடும் நிலை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்