மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றும் ஒரு பயனும் இல்லாத நிலையே உள்ளது. ஸ்டாலின் இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது மூன்று முக்கிய முழக்கங்களை முன்வைத்தார். ஒன்று நரேந்திர மோடி ஆட்சியை வீழ்த்துவது. இரண்டாவது ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது. மூன்றாவது தமிழகத்தில் ஆட்சி மாற்றம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் மூன்றுமே நடக்காத நிலை தான் உள்ளது.
ஆனால் அதிமுகவை பொருத்தவரையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டே எட்டு தொகுதியில் தான் முன்னிலை பெற்றுள்ளது. இந்த எட்டு தொகுதிகள் மீதியுள்ள இரண்டு வருட ஆட்சியை நிறைவு செய்ய போதுமானதாக உள்ளது. எனவே திமுகவுக்கு கிடைத்த 37ஐவிட அதிமுகவுக்கு கிடைத்த இந்த எட்டு பெரிய எண்ணாக மாறிவிட்டதுதான் இந்த தேர்தல் முடிவில் கிடைத்த விந்தையான விஷயம்
அதேபோல் அதிமுகவின் இன்னொரு எதிரியான தினகரனையும் பூஜ்யமாக்கியுள்ளது அதிமுகவுக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. இனி அதிமுகவுடன் தினகரன் சமாதானம் செய்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை. அவரை நம்பி சென்ற 18 எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலமும் இனி பூஜ்யம்தான்