தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

Siva

வியாழன், 31 ஜூலை 2025 (15:37 IST)
நெல்லை ஆணவக்கொலை வழக்கில் உயிரிழந்த கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி, வெளியிட்டுள்ள வீடியோவில், "தேவையில்லாமல் எங்களைப் பற்றி வதந்திகளை கிளப்ப வேண்டாம், இத்துடன் இந்த பிரச்சனையை விட்டு விடுங்கள்" என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
நானும் கவினும் காதலித்தது உண்மைதான், ஆனால், அதே நேரத்தில் நாங்கள் செட்டில் ஆக வேண்டும், ஆறு மாதம் கழித்து நம்முடைய காதலை பற்றி பெற்றோரிடம் பேசுவோம் என்று கவின் கூறியிருந்தார்."
 
"ஆனால் அதற்குள் சுர்ஜித்துக்கு இந்த விவகாரம் தெரிந்துவிட்டது. சுர்ஜித் என்னுடைய அப்பாவிடம் இதை சொல்ல, 'நீ காதலிக்கிறாயா?' என்று அப்பா என்னிடம் கேட்டார். ஆனால் நான் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டேன்."
 
"நானும் கவினும் நன்றாக செட்டில் ஆகி, பின்னர் காதலை சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தான் இப்படி ஆகிவிட்டது."
 
சம்பவத்தன்று கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவினுடன் அவரது அம்மாவும், மாமாவும் வந்திருந்தார்கள். நான் சிகிச்சை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கவின் திடீரென வெளியே சென்றுவிட்டான். அதன் பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது."
 
என் அப்பா அம்மாவுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. இதை இத்துடன் விட்டு விடுங்கள்.  அவ்வளவுதான்" என்று சுபாஷினி உருக்கமாக கூறியுள்ளார்.
 
கவின் காதலி சுபாஷினி வெளியிட்டுள்ள இந்த வீடியோ, நெல்லை ஆணவக்கொலை வழக்கில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்