தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உறுதியான முடிவுகள் தெரியவர மாலை ஆகலாம் எணா சொல்லப்படுகிறது. இந்நிலையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நரேந்திர மோடிக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார். மேலும் மோடியே மீண்டும் பிரதமர் ஆவாரா என்பதை பாஜக கட்சி உறுப்பினர் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.