அதிமுக எம்பி சிவி சண்முகம் அப்பல்லோவில் அனுமதி.. என்ன ஆச்சு?

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (07:46 IST)
முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்பி விமான சிவி சண்முகம் திடீரென உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என போராட்டத்தில் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார் என்பதும் அதன் பிறகு அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்தார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும் எம்பியும் ஆன சிவி சண்முகத்திற்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்