அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிக்கு ஜூன் 30 வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு

சனி, 17 ஜூன் 2023 (15:46 IST)
முதல்வர் முக.ஸ்டாலின் பற்றி அவதூறு வீடியோ பரப்பிய அதிமுக நிர்வாகி கெளதமை போலீஸார் கைது செய்ததை அடுத்து, ஜூன் 30 வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு மீம்ஸ், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிலர் அவதூறு வீடியோக்கள் பதிவிட்டதாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி,  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு பொறுப்பாளர் மொடக்குறிச்சி கெளதம் என்ற நபர்   முதலமைச்சரை சமூக வலைதளப்பக்கத்தில் அவதூறு வீடியோ பரப்பிய புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் ஈரோடு சைபர் கிரைம்  போலீஸாரர் அவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து போலீஸார் அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, ஜூன் 30 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்