40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்: அமித்ஷாவுக்கு அதிரடி பதிலளித்த ஈபிஎஸ்..!

ஞாயிறு, 18 ஜூன் 2023 (13:06 IST)
தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெல்லும் என சமீபத்தில் அமித்ஷா கூறிய நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் அதிமுகவி வெல்லும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை தமிழகத்தில் 39 இடம் பாண்டிச்சேரி ஒன்று என 40 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் நாங்கள் பெரும்பான்மை ஆற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். 
 
அமித்ஷாவின் 25 தொகுதி குறித்த கேள்விக்கு ’அது அவருடைய கருத்து, எங்களுடைய கருத்து இதுதான், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பிரகாசமான சூழலை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள்  ஏற்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்