அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.. இன்றைய கூட்டத்தில் தீர்மானமா?

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (10:17 IST)
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா இல்லையா என்ற தொண்டர்களின் குழப்பத்திற்கு முடிவு காணும் வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற தீர்மானம் இயற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 
 
இதனை அடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை விலக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகின்றது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது 
 
இதனை அடுத்து இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற தீர்மானம் இயற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்