பெங்களூரில் கேக் வாங்க வந்த 6 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிராக போக்சோ சட்டம் என கடுமையான பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியாக பெங்களூரில் சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கரடகியில் முகமது குட்டி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அடிக்கடி அந்த பேக்கரிக்கு கேக் வாங்க வருவது வழக்கம். அப்படியாக சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து பழகிய முகமது குட்டி, நேற்று முன் தினம் கேக் வாங்க வந்த சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி உள்ளே அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியும் உள்ளார்.
இதனால் பயந்து போயிருந்தாலும் சிறுமி அதை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த பெற்றோர், உறவினர்கள் முகமது குட்டியின் பேக்கரியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார், சிறுமியின் பெற்றோரிடம் புகார் பெற்று அதனடிப்படையில் முகமது குட்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
Edit by Prasanth.K