அண்ணாமலையை மாற்ற முடியாது.. அதிமுகவிடம் உறுதியாக தெரிவித்த பாஜக தலைமை..!

ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:43 IST)
அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நீடித்தால் அதிமுக பாஜக கூட்டணியில் சுமூகமான உறவு இருக்காது என்றும் பாஜக மேல் இடத்தில் அதிமுக தலைவர்கள் நேரில் தெரிவித்தனர். 
 
சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுகவின் வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், கே பி முனுசாமி  ஆகியோர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை சந்தித்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனார்.
 
 இதனை அடுத்து பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்த அவர்கள் அண்ணாமலை பாஜக தலைவராக நீடித்தால் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று கூறினார். ஆனால் ஜெபி நட்டா, அண்ணாமலையை மாற்ற முடியாது என்று உறுதிபட தெரிவித்ததை அடுத்து அதிமுக தலைவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா என்பதை தேர்தல் நேரத்தில் தான் உறுதிபட சொல்ல முடியும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்