இந்தியாவில் பேட்டரி தொழிற்சாலை - எலான் மஸ்கின் திட்டம்

சனி, 23 செப்டம்பர் 2023 (20:15 IST)
உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டுவருகிறார்.

அதேபோல், டெஸ்லா என்ற உலகின் முன்னணி கார்  நிறுவனத்தின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

அதிரடி செயல்களுக்குச் சொந்தக் காரரான எலான் மஸ்க் இந்தியாவின் பேட்டரி சேமிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான முன்மொழிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிடம் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும், இதையடுத்து முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தடம் பதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்