திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவிழாவில் சிகர நிகழ்வாக இன்று தேர் திருவிழா நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருவாரூரில் புகழ்பெற்ற பழம்பெரும் தியாகராஜர் கோயிலில் பங்குனி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்வாக இன்று தேர் திருவிழா நடைபெறுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய தேர் என்று புகழ்பெற்ற ஆழித்தேர் இன்று பக்தர்களால் வடம் பிடித்து இழுத்து செல்லப்படுகிறது.
96 அடி உயரமும் 350 டன் எடையும் கொண்ட இந்த தேர் உலாவை காண பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்களும், பல வெளிநாட்டு பயணிகளும் என ஆயிரக்கணக்கில் மக்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர். 4 வீதிகள் வழியாக தேர் வலம் வரும் நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோடை வெயில் அதிகமாக உள்ளதால் நான்கு வீதிகளிலும் தேர் வீதிக்கு செல்லும் பிரதான சாலைகளிலும் பலர் நீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.
Edit by Prasanth.K