பெண் கத்தியால் குத்திக் கொலை: இளைஞர் கைது

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (14:47 IST)
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்  பகுதியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார் மெர்சி ( 21) என்ற இளம்பெண்.
வீட்டில் சூழ்நிலை காரணமாக பொறுப்பை உணர்ந்து வேலைக்கு சென்று வந்தவருக்கு விதி ரவி (25) என்பவர் மூலம் வந்ததுள்ளது. 
 
அதாவது திருகுறுக்குடி மகிழடியை சேர்த ரவி என்பவர் மெர்சியை கடந்த சில வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். அடிக்கடி மெர்சியை தொந்தரவு செய்து வந்த ரவி தன்னை காதலித்தாக வேண்டும் எனவும் மிரட்டியுள்ளான்.
 
ஆனால் குடும்ப சூழ்நிலையின்  காரணமாக ரவியின் காதலை ஏற்க மெர்சி மறுத்ததாக தெரிகிறது.  இதனால் ஏமாற்றமடைந்த ரவி நேற்று மாலை 6 : 30 மணியளவில் மெர்சி வேலை செய்யும் துணிக்கடைக்குச் சென்று தன் கையில் மறைத்து  வைத்திருந்த கத்தியால் அவரை சராமாரியாக குத்திவிட்டு சாதாரணமாக அங்கிருந்து நடந்து சென்றான். 
 
ரவியை பின் தொடர்ந்து சென்ற மக்கள் அவனை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
 
கத்தியால் குத்தப்பட்ட மெர்சி ஆபத்தான நிலையில் வலியால்  துடிதுடிக்க... அங்குள்ள மக்கள்  அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியில் மெர்சி  பரிதாபமாக உயிர் இழந்தார்.
 
இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்