கல்யாணப் பெண் தூக்குப் போட்டு தற்கொலை!!!

சனி, 17 நவம்பர் 2018 (15:31 IST)
சென்னையில் உள்ள எண்ணூர் பகுதியில் தன் தாய் தந்தையருடன் வசித்து வந்தவர் ரம்யா. 8 ஆம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார்.


 

 
ரம்யாவுக்கு வயதாகிக்கொண்டே இருந்ததால் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து பேரன் பேத்தியை கொஞ்சிப் பார்க்க ஆர்வமுடன் காத்து இருந்தனர்.
 
எனவே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பதிலிருந்து திருமணத்திற்கு தேதி குறிப்பதுவரை எல்லா ஏற்படுகளும் முடிவடைந்த நிலையில் கலியாணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது. இந்நிலையில் ஜவுளிப் பொருட்கள் வாங்குவதற்காக பெற்றோர் வரச் சொல்ல...’ உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நீங்களே வாங்கிட்டு வாங்க..’என தன் பெற்றோரிடம் ரம்யா கூறியுள்ளார்.
 
பெற்றோர் மகிழ்ச்சியாக திருமணப்பெண்ணிற்கு தேவையான ஜவுளிப் பொருட்களை வாங்கி விட்டி திரும்பி வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியபோது கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது.
 
எவ்வளவு தட்டியும் கதவு திறக்கப்படவே இல்லை.
 
சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த போது ரம்யா அறையில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.
 
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் வழக்கு பதிவு செய்து ரம்யா தற்கொலைக்கான காரணத்தை பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்