செல்போன் வாங்கித் தராததால் மாணவி தற்கொலை

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (10:38 IST)
செல்போன் வாங்கிக்கொடுக்காததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். ஒரு பொருளை வாங்க ஆசைப்பட்டால் அதனை உடனே அடைய வேண்டும் என்ற எண்ணம். இதற்காக கடன் வாங்கி, பின் கடனை கட்ட முடியாமல் வாங்கிய பொருளை விற்கும் நிலைக்கும், பலர் தற்கொலை முடிவிற்கும் தள்ளப்படுகிறார்கள். 
 
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையை சேர்ந்த அய்யாத்துரை என்பவரது மகள் அகிலா (22), தன்னுடன் படிக்கும் மாணவிகள் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால் தனக்கும் ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்கும் படி, அவர் தன்ந்தையிடம் கேட்டுள்ளார். பணம் இல்லாததால் அய்யாத்துரை தனது மகளிடம் பிறகு செல்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
 
இதனை ஏற்க மறுத்த அகிலா, தனது தந்தையிடம் ஸ்மார்ட்போன் வாங்கித்தரும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அய்யாதுரை அகிலாவிடம், நீ காலேஜுக்கெல்லாம் போகத் தேவையில்ல வீட்லயே இரு என கூறியிருக்கிறார்.
 
இதனால் மனமுடைந்த அகிலா, வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். 
 
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கு வேறேதும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்